இனி மாதுளையின் தோலை தூக்கி எறியாதீங்க! பல அற்புத நன்மைகள்

மாதுளம் பழம் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் மற்றும் அதிக மருத்துவ பண்புகளை கொண்டது ஒரு பழமாகும்.

இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை, அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபிளாவோனோட்களை கொண்டுள்ளது.

மாதுளம் பழம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மாதுளம் பழம் மட்டுமின்றி அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றது. இவற்றை தெரிந்து கொண்டால் இதன் தோலை இனி தூக்கி வீசமாட்டீங்க. தற்போது அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

மாதுளை தோலை காய வைத்து தூளாக்கி, அதை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றத்திலிருந்து தீர்வு தரும். மொத்தத்தில், உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை தோல் சிறந்தது.

எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் மாதுளை தோல் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.

மாதுளை தோல் உங்கள் சருமத்தை இளமையாகவும்,பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகிறது, ஏனெனில் இது வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது, மேலும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது.

மாதுளை தோலை காய வைத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இருமல், தொண்டை புண் இருப்பின், இந்த தூளை தண்ணீரில் கலந்து குடியுங்கள். இது உங்கள் பிரச்சினையை குணப்படுத்துவதோடு உடனடி நிவாரணத்தையும் வழங்கும்.

புற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு மாதுளை தோல்கள் பயனுள்ளதாக இருக்கும். மாதுளை சாற்றில் ஒரு முன்னெச்சரிக்கையாக புற்றுநோய் செல்களை கண்டறிந்து போராடும் பண்புகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட பண்பானது சருமத்தின் புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது.

மாதுளை தோல்களில் எல்.டி.எல் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்க்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக உள்ளன. இதனால், மாதுளை தோல்கள் இதய நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.