பிக்பாஸ் பாலாஜியை பங்கம் செய்த சனம் ஷெட்டி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் இதற்கு முன்பாக குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் வீட்டில் இவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் கூட தற்போது வரை கெத்தாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு பிகைண்ட்வுட்ஸ் சார்பாக ஒரு விருது வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த விருது தற்போது தனக்கு வேண்டாம் என்று அவர் கொடுத்துவிட்டார்.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் தான் மேடையில் பேசிய வீடியோக்களை அவர்கள் வெளியிடவில்லை என்றும் எனவே அந்த நேரத்தில் நான் திருப்பி கொடுக்கிறேன் என்றால் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

பாலாஜி பேசிய வீடியோவை வெளியிடாததற்கு காரணம் அவர் தொகுப்பாளரை தவறாக பேசியது தான் என்று கூறப்படுகிறது. எனவே, தான் அந்த வீடியோவை வெளியிடவில்லை. இது தன்னை அவமானப் படுத்தும் விதமாக இருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாலாஜியின் இந்த பதிவுக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னை மிகவும் தரக்குறைவாக பிக்பாஸ் வீட்டில் பேசியபோது சகபோட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கெடுக்காத பெண்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் நினைத்து பார்த்தீர்களா.? Attitude -ஐ காண்பிக்கும்போது மோசமான வார்த்தைகள் பற்றி பேசும் போது இந்த கண்ணியம் எங்கே போச்சு.? இழந்த 2 நிமிட புகழுக்காக எனது வாழ்த்துக்கள் என்று ஷனம் தெரிவித்துள்ளார்.