சொந்த வீட்டை விட்டு வெளியேறும் இலங்கையின் பிரபலம்

அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான 44 வயதான திலகரத்ன டில்ஷான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கும் தன்னுடைய குடும்பத்தாரோடு வசித்து வருகின்றார்.

மெல்போர்ன் நகரின் கடற்கரை பகுதி சார்ந்து டில்ஷான் குடியிருக்க தயாராவதாக  செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் டில்ஷான் தன்னுடைய குடும்பத்தாரோடு அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதோடு அவரும், அவரது மூத்த மகளும் கிரிக்கெட் களத்தில் சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் டில்ஷானின் மகள் அவுஸ்திரேலியாவின் இளையோர் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.