LG Pay கட்டண சேவை நிறுத்தம்..!!

எல்ஜி தனது கட்டண சேவையான LG Pay ஐ நிறுத்தியுள்ளது. நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வணிகத்தை மூடுவதாக அறிவித்ததை அடுத்து இந்த கட்டண சேவையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

“எல்ஜி பேவின் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருப்பதற்கு நன்றி! எல்ஜி பே 2021 ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் நிறுத்தப்படும் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று நிறுவனம் பயனர்களுக்கு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

எல்ஜி சேவை நிறுத்தம் குறித்த கூடுதல் விவரங்களை எதிர்வரும் நாட்களில் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி பே பயனர்கள் தங்கள் எல்ஜி சாதனங்களில் பிற கட்டண சேவைகளுக்கு மாறலாம். எல்ஜி பேவுக்கு எல்ஜி ஸ்மார்ட்போன்களில் ஆதரவு கிடைக்கும் Magnetic Stripe அம்சமும் இனி Google Pay இல் இயங்காது.

எல்ஜி 2017 ஆம் ஆண்டில் கட்டண சேவையை அறிமுகப்படுத்தியது. கூகிள் மற்றும் சாம்சங்கிலிருந்து கட்டண சேவைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சேவையும் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், நிறுவனம் ஒரே நேரத்தில் அனைவருக்கும் சேவையை வழங்கவில்லை. அறிவிக்கப்பட்ட ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளில், இது அமெரிக்காவில்  magnetic stripe terminals ஆதரவுடன் கிடைத்தது. அதன் பிறகு பல பயனர்களுக்கு இதை கிடைக்க செய்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், எல்ஜி ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக கூறியிருந்தது. இதையடுத்து எல்ஜி இனி ஸ்மார்ட்போன்களை உருவாக்காது என்பதால் இந்த சேவை நிறுத்தமும் எதிர்பார்த்த ஒன்ராக பார்க்கப்படுகிறது.