மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேருக்கு கொரோனா…

நேற்று (25) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி -8 மட்டக்களப்பு -2 வாழைச்சேனை -4 காத்தான்குடி – 13 ஓட்டமாவடி – 1 கோறளைப்பற்று மத்தி -11 ஏறாவூர் – 09 வவுனதீவு – 11 பட்டிப்பளை -01 வெல்லாவெளி -02 ஆரையம்பதி -15 செங்கலடி -02 கிராண் -08 பொலிஸ் -05 மட்டக்களப்பு சிறைச்சாலை – 05

மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 172 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது .

கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 99 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது