கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
பின்னர், வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்தவுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
பிணத்தை எரிக்கவோ மருத்துவமனைகளில் படுக்கைக்கோ இடம் கிடைக்காமல் மக்கள் அன்றாடம் அல்லாடி வரும் செய்திகளை காணமுடிகிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது விதி முறைகளை கடைப்பிடிப்பது என்று முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகை நிக்கி கல்ராணி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை ஓபன் செய்து அதன் மூலம் இலவசமாக தன்னிடம் இருக்கின்ற பொருட்களை பிறருக்கு பகிர்ந்து வருகின்றார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது.