சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் நந்தினி, இந்த சீரியலில் வரும் மைனாவின் பெயரே இவருக்கு அடைமொழியாகவும் மாறிவிட்டது.
அந்தளவுக்கு தனது இயல்பான நடிப்பால் அதிக கவனம் ஈர்த்தார், தொடர்ந்து பல்வேறு சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், படங்களில் நடித்து படு பிஸியான நடிகையாகவே மாறிவிட்டார்.
இவரது முதல் திருமணம் தோல்வியில் முடிய, 2வதாக நடிகரான லோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு துருவன் என்ற மகனும் இருக்கிறார், தற்போது MR and MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக அசத்தி வருகின்றனர்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாவில் 1M, பாலோயர்ஸ் வந்ததை கூட மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தினர், இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ரம்யாவின் கணவர் சத்யாவுடன் மைனா நந்தினி ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram







