நகைச்சுவை நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், நகைச்சுவை நடிகர் கிங்காங்கை போனில் தொடர்பு கொண்டு பேசிய நெகிழ வைக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நெத்தியடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் கிங்காங் என அழைக்கப்படும் நடிகர் சங்கர். இவர் வளர்ச்சி குன்றி சிறிய தோற்றத்துடன் காணப்படுவார்.

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்ற விருதை ரஜினி கையால் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிங்காங். ஆனால் இந்த தகவல் ரஜினியை சென்று சேரவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கிங்காங் இதனை கூறினார்.

இந்த வீடியோ தற்போது ரஜினியின் பார்வைக்கு சென்றுள்ளது. இதனை பார்த்து நெகிழ்ந்து போன ரஜினிகாந்த், உடனடியாக கிங்காகை போனில் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் விரைவில் சென்னை திரும்பியதும் நேரில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்குடன் போனில் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.