இலங்கையில் ரஸ்யாவின் தடுப்பூசி- முக்கிய தகவல்

இலங்கையில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மார்ச் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இலங்கையில் இதுவரை 4 ஆயிரத்து 380க்கும் மேற்பட்டவர்களுக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 15,000 டோஸின் முதல் தொகுதி கடந்த வாரம் இலங்கைக்கு வந்தது. அதனையடுத்து, கடந்த மே 6 ஆம் திகதி முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நாட்டில் பயன்பாட்டுக்கு வந்தது.

அதன்படி, 30 முதல் 60 வயதிற்கு உட்பட்ட கொதொட்டுவவில் வசிப்பவர்களுக்கு முதலில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டது. இதேநேரம், ரஷ்யாவுடனான ஒரு ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசியின் அதிக அளவு இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 13.5 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அரசாங்கம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.