பிரபல இலங்கை முன்னாள் வீரருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து 6 ஆண்டுகள் தடை!

ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சாவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.சி.சி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஐ.சி.சி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் சொய்சாவை குற்றவாளி என்று கண்டறிந்த பின் அவருக்கு ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொய்சாவுக்கான தடை அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 31 அக்டோபர் 2018-ல் இருந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

முன்னர் அறிவுறுத்தியபடி, முழு விசாரணைகளையும் தொடர்ந்து தீர்ப்பாயம் சொய்சா குற்றவாளி எனக் கண்டறிந்தது.

டி-10 லீக்கிற்கான பங்கேற்பாளர்களுக்கான ஈசிபி ஊழல் தடுப்புக் சட்டத்தின் மூன்று பிரிவுகளை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) சார்பாக ஐ.சி.சி-யால் சொய்சா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

சொய்சா குறித்து ஐ.சி.சி பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியதாவது, சொய்சா இலங்கைக்காக 125 போட்டிகளில் விளையாடினார், 10 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஊழல் எதிர்ப்பு சந்திப்புகளில் கலந்து கொண்டார்.

தேசிய பயிற்சியாளராக இருந்த போது அவர் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர் ஊழல் செய்பவருடன் தொடர்பு கொண்டு மற்றவர்களை ஊழலில் ஈடுபடுத்த முயன்றார்.

இது போன்ற செயல்கள் எங்கள் விளையாட்டில் சகித்துக் கொள்ளப்படாது அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.