ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் இதுவரை எந்தநெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது?

ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், எந்தெந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கிடையே, பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் எதிர்பார்க்காத வகையில், பெங்களூரு அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே போன்று சென்னை அணியும் பலமான அணியாக உள்ளது. இப்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இவ்விரு அணிகளே மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் நேற்று டெல்லியை வென்றதன் மூலம் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த படியாக 5 போட்டிகளில் 4 வெற்றி 1 தோல்வி என 8 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் டெல்லி 8 புள்ளிகளுடனும், நான்காவது இடத்தில் மும்பை நான்கு புள்ளிகளுடன், ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், அதற்கு அடுத்த படியாக ராஜஸ்தான் அணி 7-வது இடத்திலும், 6-வது இடத்தில், பஞ்சாப் மற்றும் 5-வது இடத்தில் கொல்கத்தா அணியும் உள்ளது