எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதனைத் தொடர்ந்து, அவர் கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவருக்கு நடிகர் விஷாலுடன் காதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சில வருடங்கள் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருந்தார். லட்சுமிமேனன் சில மாடல்களை நடிக்கத் தொடங்கினார். இருப்பினும், அவருடைய முகத்திற்கு அதெல்லாம் செட் ஆகவில்லை.
மேலும், படவாய்ப்புகளும் குறையத் துவங்கியது. உடல் எடையை குறைத்து அவரது அழகையே இழந்துவிட்டார். தற்போது, மீண்டும் உடல் எடையை அதிகரித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில், முத்தையா இயக்கத்தில் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்தார்.
புலிக்குத்திபாண்டி படத்தில் ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்தார். இத்தகைய சூழலில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகை லட்சுமிமேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்டேட் கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது நடிகை லட்சுமி மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.
View this post on Instagram