மகளுடன் நெகிழ்ச்சியாக போட்டோ வெளியிட்ட குஷ்பூ.!

தமிழில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமடைந்து கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு, இவர் தமிழை தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார்.

எந்த நடிகைக்கும் கிடைக்காத புகழ் நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்தது. தமிழ்நாட்டு ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டி கொண்டாடினர். இவருக்கு இயக்குனர் சுந்தர் சி யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது குஷ்புவிற்கு 20 வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது, இந்த புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.