சிவப்பு இறைச்சி ஏன் பெண்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் சிவப்பு இறைச்சியை விரும்பி சாப்பிடும் பலரும், இதனை தினந்தோறும் உட்கொள்ளும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர் என்று பல ஆய்வுகளில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சிவப்பு இறைச்சியில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. தற்போது பெண்கள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • அதிக வெப்பநிலையில் சமைக்கும்போது சிவப்பு இறைச்சியானது புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்களை வெளியிடுவதாக கூறப்படுகிறது. கால்நடைகளுக்கு அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க கொடுக்கும் ஹார்மோன்கள் இறைச்சியின் காரணமாக பெண்களின் ஹார்மோன் அளவையும் உயர்த்த கூடும்.
  • மேலும் பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சியில் நைட்ரேட்டுகள் உள்ளன. அவை மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அதுமட்டுமின்றி சிவப்பு இறைச்சி ஏற்படுத்தும் பாதிப்புகளில் மார்பக புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், அல்சைமர் நோய், பக்கவாதம், அதிக கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கான அபாயத்தை அதிகரிப்பதில் சிவப்பு இறைச்சிக்கு முக்கிய பங்குண்டு என்பதற்கான சான்றுகள் உள்ளன.
  • எனவே முடிந்த அளவு இவற்றை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.