நடிகர் விவேக் உடல்நிலை கவலைகிடம்!

நடிகர் விவேக் உடல்நிலை கவலைகிடம் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மயங்கிய நிலையில் குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவசர சிகிச்சை அறையில் சிறப்பு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவரக்கு நினைவு திரும்பியது.

பின்னர் அவருக்கு அவசர coronary ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் கவலைகிடமாக இருக்கிறார்.

இது cardiogenic அதிர்ச்சியுடன் கூடிய கடுமையான கரோனரி coronary syndrome. இது ஒரு தனி நிகழ்வு. கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.