கர்ணன் படத்தில் முக்கிய பிரபலம்..

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கர்ணன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கர்ணன் படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படக்குழு அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் திரையரங்கில் காண சர்ப்ரைஸாக வைத்துள்ளார்களாம்.

நடிகர் நட்டி நடராஜ் சதுரங்க வேட்டை திரைப்படத்திற்கு பிறகு, நடித்துள்ள இந்தப் படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறாராம். இது கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.