நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு, செருப்படி கொடுத்த நடிகை பிரியாமணி.!

தமிழ் சினிமாவில் ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியாமணி அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பருத்தி வீரன் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் தற்போது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ஒரு நெட்டிசனுக்கு அவர். முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அவர்கள் செய்தால், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்’ என்று தக்க பதிலடி கொடுத்து இருக்கின்றார்.