பிக் பாஸ் சாண்டியின் மகள் லாலா-வா இது!

மானாட மயிலாடா நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி திரையுலகில் களமிறங்கியவர் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர்.

இதன்பின் ரஜினி, சிம்பு, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

ஆனால் பிக் பாஸ் சீசன் 3, சாண்டி மாஸ்டருக்கு மிகப்பெரிய பெயரை ரசிகர்கள் மனதில் கொடுத்தது.

மேலும் தற்போது 3:33 எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார் சாண்டி.

சாண்டி மாஸ்டருக்கு திருமணமாகி, லாலா ஒரு பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா, குக் வித் கோமாளி அஸ்வினுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு லாலா, நன்றாக வளர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..