என்னது இவருடன் எனக்கு திருமணமா? அதிரடியாக விளக்கமளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதையடுத்து, சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கீர்த்தி, அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது.

எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை. இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை.

எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பதிலளித்துள்ளார்.