தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது ‘விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறினால் சந்தோஷம் விரைவில் விஜயுடன் நடிப்பேன்.’ எனவும் தெரிவித்துள்ளார்.







