பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று சிங்கப் பெண்ணாக திரும்பி வந்த ரம்யா ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை.
பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்தார்.
தற்போது இவரது சகோதிரி கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியில் குதித்துள்ளார். தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த கீர்த்தி பாண்டியன், அக்காவுக்குப் போட்டியாக ஆற்றில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அடடே அக்காவுக்கே போட்டியா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.








