நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீடு- பூமி பூஜையில் கலந்துகொண்ட ரஜினி

நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்ற அளவிற்கு விமர்சிக்கப்பட்டவர்.

அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

தனுஷ் தற்போது புதிதாக வீடு கட்ட இருக்கிறார், அதற்கான பூமி பூஜை போயஸ் தோட்டத்தில் இன்று நடந்துள்ளது.

ரஜினி இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளார், அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.