முட்டை கட்லெட் குழம்பு செய்வது எப்படி?.!

மாத இறுதி காலங்களில் பட்ஜெட் காரணமாக மட்டன், சிக்கன் என விதவிதமான உணவுகளை தயார் செய்ய இயலாத குடும்பத்தினரும், பணிகளுக்காக வெளியூரில் பணியாற்றி வரும் பேச்சுலர்களுக்கும் உதவும் வகையில், சுவையான முட்டை கட்லெட் குழம்பு தயார் செய்வது எப்படி என காணலாம்.

முட்டை கட்லெட் குழம்பு தேவையான பொருட்கள்:

முட்டை – 5,
பொட்டுகடலைமாவு – அரை கிண்ணம்,
தேங்காய் – 1 (துருவியது),
பெரிய வெங்காயம் – 3,
கேரட் – 1 (துருவியது),
தக்காளி – 3 (நறுக்கியது),
மிளகாய் – 5 (நறுக்கியது),

இஞ்சி – சிறிதளவு,
சோம்பு – 1 சிறிய கரண்டி,
தனியா – 2 சிறிய கரண்டி,
கசகசா – 1 கரண்டி,
பூண்டு – 6 பற்கள்,
சீரகம் – 2 கரண்டி,
கொத்தமல்லி தழை – தேவையான அளவு,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

முட்டை கட்லெட் குழம்பு செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வானெலியில் இஞ்சி, பூண்டு, கசகசா, தனியா மற்றும் சோம்பு போன்றவற்றை சேர்த்து முதலில் வறுத்து எடுத்துக்கொண்டு பின்னர் அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனைப்போன்று தக்காளி, தேங்காய்த்துருவல், மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வதக்கி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை அடித்து நன்றாக கலக்கிவிட்டு, பொட்டுக்கடலை மாவு, கேரட், உப்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

இதன்பின்னர் கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றி இட்லி போல வேக வைத்து எடுத்து கொள்ளவும். வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானது இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்த மசாலா கவலைகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு போட்டு, இரண்டு முதல் 3 குவளை நீர் ஊற்றி கொதிக்கவிடலாம். மசாலா வாசனை நீங்கும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவைத்துவிட்டு, முட்டைகளை இறுதியாக மசாலா கலவையில் சேர்த்து 15 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான முட்டை கட்லெட் குழம்பு தயார்.