தளபதி 65 படத்தில் இணையும் கே.ஜி.எப் பட பணியாளர்கள்..!!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.

மேலும் இப்படம் தற்போது வரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிக்க முக்கிய கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளராக அன்பறிவு பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், கே.ஜி.எப், கைதி, கபாலி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அன்பறிவு தான் இப்படத்திலும் பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.