கல்யாண கலை முகத்துல தெரியுதே.

பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து தனது திறமையை அங்கும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இவருடைய திரைப்பட வாழ்வில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது தாரை தப்பட்டை மட்டும் தான். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தேசியவிருது வாங்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இருப்பினும், இவருடைய நடிப்பு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த வரலட்சுமிக்கு விஜய் படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சர்க்கார் படத்தில் நடித்தார். அதன் பின்னர், மாரி 2 , நீயா 2, டேனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார்.

தொடர்ந்து, நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் செய்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து லட்சணமாக புடவை அணிந்து அடக்கமான போஸில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கின்றார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் கல்யாண கலை முகத்தில் தெரியுதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.