டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல்!

தற்போது டெலிகிராம் ஆப்பை பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பலரும் டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் டெலிகிராம் மெசஞ்சர் ஆப்பில் உள்ள ஒரு அம்சத்தின் வழியாக உங்கள் சரியான லோக்கேஷனை ஹேக்கர்களால் பிரித்தெடுக்க முடியும். அதாவது இது உங்களின் துல்லியமான இருப்பிடத்தைப் பெற உதவுகின்றது என்று கூறப்படுகின்றது.

அண்மையில் வெளிவந்த ஆர்ஸ்டெக்னிகாவின் தகவலின்படி, டெலிகிராம் ஆப் அதன் பயனர்களை அவர்கள் இருக்கும் புவியியல் பகுதிக்குள் லோக்கல் க்ரூப்களை உருவாக்க அனுமதிக்கிறது.

இதுபோன்ற லோக்கல் க்ரூப்களுக்கு நுழைய பெரும்பாலான ஸ்கேமர்கள் (மோசடி செய்பவர்கள்) தங்கள் லோக்கேஷனை ஸ்பூஃப் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு போலி பிட்காயின் முதலீடுகள், ஹேக்கிங் டூல்ஸ், சோஷியல் செக்யூரிட்டி நம்பர் திருட்டு மற்றும் பிற மோசடிகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று ஹசன் கூறியுள்ளார்.

அதிகமான டெலிகிராம் பயனர்கள் தங்களின் இருப்பிடத்தைப் பகிர்வது, தங்களின் வீட்டு விலாசத்தை கொடுப்பதற்கு சமம்.

மேலும் ஒரு பெண் லோக்கல் க்ரூப்பில் சாட் செய்ய இந்த அம்சத்தைப் பயன்படுத்தினால், தேவையற்ற பயனர்களால் அவர் பின்தொடரபடலாம்.

இதனால் இதனை பயன்படுத்து பாவனையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.