ஈஸ்வரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஒலித்த தளபதி விஜய்யின் பெயர், அதிர்ந்த அரங்கம்..வீடியோவுடன் இதோ..!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஈஸ்வரன், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தளபதி விஜய்யின் மாஸ்டருடன் வரும் பண்டிகையை முன்னிட்டு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனிடையே ஈஸ்வரன் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று ஒரு திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது அப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை நந்திதா ” நான் தமிழ் சினிமாவில் சாதிக்க விரும்பியது, 4 சூப்பர் ஸ்டாருடன் நடப்பது தான்.

அதில் ஒன்று இளைய தளபதி விஜய்” என அவர் கூறியதும் அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். மேலும் நடிகை நந்திதா புலி படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.