பிக்பாஸ் நிகழ்ச்சியானது 90 நாட்களை கடந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பாலா ஆரி இடையே பெரிய வாக்குவாதமே ஏற்பட்டது.
ஆரி சும்மா இருந்தாலும், பாலா வீண் வம்பாக சென்று பிரச்சினை இழுத்து வந்தார். மேலும் ஆரியை தகாத வார்த்தைகளாலும் திட்டி மிரட்டினார்.
இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய கமல், பாலாவின் தவறை உணர்த்தி எச்சரித்தார். ஆனாலும் பாலா அதையே பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில் பாலா கன்பெஷன் அறையில், கோபத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கேன்.
எது சரி தவறு என சொல்ல யாரும் இல்லை.. என கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக்கண்ட கமல் தவறை திருத்திகொண்டதற்கு குட் என வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக கையை உயர்த்தி காட்டியுள்ளார்.







