ரூ 27 கோடிக்கு விலை போன பிக்பாஸ் பிரபலத்தின் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை எட்டவுள்ளது. உலக நாயகன் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்குவது போல தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார்.

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 அண்மையில் தான் நிறைவு பெற்றது. அபஜித் என்பவர் பிக்பாஸ் கோப்பையையும் ரூ 50 லட்சத்தை வென்றார். பிக்பாஸ்க்கு இடையில் ஓரிரு நாட்கள் சினிமா படப்பிடிப்பிலும் நாகார்ஜூனா கலந்து கொண்டார்.

அவருக்கு பதிலாக அவரின் மருமகளான நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் நினைவிருக்கும் தானே.

நாகார்ஜூனா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள Wild Dog. இப்படத்தை Netflix நிறுவனத்திற்கு ரூ 27 கோடிக்கு விற்றிருக்கிறாராம் தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி. மேலும் சாட்டிலைட் டிவி ரைட்ஸ் ரூ 10 கோடிக்கு விலை போயுள்ளதாம்.

போலிஸ் துணை கமிஷனராக நாகார்ஜூன் நடிக்க தியா மிஸ்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.