அஜித்தின் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகர் பிரஷாந்த்.. தல அஜித்தை அவமானம் படுத்தினாரா??

வைகாசி பொறந்தாச்சு எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த்.

திரையுலகில் சிறந்த படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த் தீடீரென பல தோல்வி படங்களை கொடுக்க துவங்கினார்.

இதனால் நடிகர் பிரஷாந்த் தமிழில் தனது மார்க்கெட்டை இழந்து, தற்போது வரை தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்க தவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் குறித்து நமக்கு தெரியாத பல சுவாரஸ்ய விஷயங்களை பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் போட்டுடைத்துள்ளார்.

இதில் ” மம்முட்டி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் முதன் முதலில் அஜித்தின் கதாபாத்திரத்தில் பிரஷாந்த் தான் நடிக்க வேண்டியது. ஆனால் எனக்கு மம்முட்டி கதாபாத்திரத்தில் மட்டும் தான், நான் நடிப்பேன் என்று நடிகர் பிரஷாந்த் கூறியதால், படத்தில் இருந்து வெளியேறினாராம் பிரஷாந்த் “.

மேலும் பிரஷாந்தை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்..