சர்க்கரை நோயால் வரும் குழிப்புண்ணை குணப்படுத்த இந்த ஒரு சக்தி வாய்ந்த இலை போதும்! கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் பேராபத்து?

ஆவாரம் பூ நீரிழிவுக்கு அருமருந்து என்பது தெரியும். இதன் இலையும் நீரிழிவால் உண்டாகும் சர்க்கரை புண்ணுக்கு மருந்தாக கூடும்.

ஆனால் எந்த நிலையில் இருக்கும் போது பலன் கிடைக்கும். எல்லோரும் இதை பயன்படுத்தலாமா? என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

  • சர்க்கரை நோயால் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்துவது கடினமானது. குறிப்பாக குழிப்புண்ணுக்கு சிகிச்சை என்பது சிரமமானது.
  • இதற்கு பாரம்பரிய வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும். ஆனால் குழிப்புண்ணை மிக ஆரம்ப தொடக்க நிலையில் கண்டறிந்தால் மட்டுமே இது சாத்தியம். இதிலும் மருந்துகள் உணவுமுறைகள் வாழ்க்கை முறைகளோடு இந்த பாரம்பரிய வைத்தியத்தை மேற்கொள்ளலாம்.
  • ஆவாரம் இலையை அம்மியில் அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி புண்ணின் மீது வைத்து வெள்ளை துணியில் கட்டிகொள்ள வேண்டும்.
  • தினமும் இரவு நேரத்தில் கட்டி காலை எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து இதை செய்துவரலாம். நாளடைவில் புண் பாதிப்பு குறையக்கூடும்.
  • சர்க்கரை நோயாளிக்கு ஆரம்ப கட்டமாக இருந்தால் இந்த வைத்தியம் செய்யலாம்.
  • கூடவே வழக்கமாக எடுத்துகொள்ளும் மருந்து மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையையும் தவிர்க்க கூடாது. சில நாள்கள் தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலன் இருக்கும்.
குறிப்பு

நோய்க்கு கை வைத்தியம் செய்வது என்பது நிச்சயம் பலன் கொடுக்கும். சர்க்கரை நோயால் குழிப்புண் உபாதை ஏற்படும் போதும் மற்ற வேறு எந்த நோயாக இருந்தாலும் அவை தீவிரமான பாதிப்பு இருக்கும் போது சுயமாக எந்த கை மருத்துவமும் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை பெயரில் சிகிச்சை பெறுவதே நல்லது.