அஜித் பேசியதை கேட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

அஜித், விஜய் ஒருவரும் தமிழ் திரையுலகில் தன்னிகரில்லாத இரு பெரும் நட்சத்திர கலைஞர். இவர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 2021 ஜனவரி 13 ல் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் அவரின் நண்பரான சஞ்சீவ், ஸ்ரீ நாத், ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சஞ்சீவ் ஒரு பேட்டியில் முக்கியமான நிகழ்வு ஒன்றை கூறியுள்ளார். இதில் 12 வருடங்களுக்கு முன் அஜித்தை நானும் என் நண்பன் ஸ்ரீநாத்தும் சந்தித்தோம். ஸ்ரீ நாத்தின் கதையை அஜித்திடம் சொன்னோம். அஜித் சுவையான பழரசத்தை எங்களுக்கு கொடுத்தார். அப்போது என்னுடையை குறிக்கோள் விஜய்யை வெற்றி பெறுவது தான் என அஜித் கூறினார். அத்துடன் அவர் விஜய்யை முந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வரவேண்டும் என கூறினார். நாங்கள் இருவரும் எந்த கருத்தும் பின் கூறவில்லை. பின்னர் விஜய்யிடம் இது பற்றி கூறிய போது அவர் சிரித்துக்கொண்டே அஜித்தை வெளிப்படை தன்மையை பாராட்டி பேசினார் என குறிப்பிட்டுள்ளார்.