தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இதனையடுத்து ரகுல் பிரீத் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். தற்போது நன்றாக உணர்கிறேன்.
ஓய்வுக்கு பிறகு விரைவில் படப்பிடிப்புக்கும் திரும்புவேன். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி” என்று கூறியுள்ளார்.
முன்னணி கதாநாயகியான ரகுல் பிரீத் சிங் கொரோனாவில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
— Rakul Singh (@Rakulpreet) December 22, 2020