நடிகை ஹன்சிகாவின் மனதை உருக்கும் செயல்.!

மாப்பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஹன்சிகா நடித்து இருக்கின்றார்.

ரசிகர்களுக்கு ஹன்சிகாவிடம் பிடித்த விஷயமே அவர் கொழுகொழுவென்று இருப்பது தான். ஆனால், தற்போது அவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டார். இது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை கொடுக்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்ற ஹன்சிகா சமீபத்தில் சுற்றுலாவிற்காக மாலத்தீவுகள் சென்று அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நாய்களுக்கு உணவளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அவர் அவ்வப்போது ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். இதனாலேயே அவருக்கு பெருமளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)