2020 இறுதியில் உலகம் அழியுமா? கிறிஸ்மஸ் அன்று பூமியைக் கடக்கும் ராட்சத சிறுகோள்!

வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகப்பெரிய சிறுகோள் (Asteroid) ஒன்று பூமிக்கு மிக அருகில் விண்ணில் கடந்து செல்லவுள்ளதாக NASA தெரிவித்துள்ளது.

Asteroid 501647 (2014 SD224) என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் 689 அடி அகலம், அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் நீளத்துக்கு இருக்கலாம் என அமெரிக்க விண்வெளி ஆராய்சசி மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 22,000 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த பெரிய Asteroid 501647 (2014 எஸ்டி 224) பூமியிலிருந்து 1.9 மில்லியன் மைல்களுக்குள் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தோன்றலாம், ஆனால் விண்வெளியின் அடிப்படையில் இது மிகவும் நெருக்கமாக உள்ளது என அறியப்படுகிறது.

4.65 மில்லியன் மைல்களுக்குள் வேகமாக நகரும் எந்தவொரு விண்வெளி பொருளும் எச்சரிக்கையான விண்வெளி அமைப்புகளால் (potentially hazardous) “அபாயகரமானதாக” கருதப்படுகிறது.

இந்த விண்வெளி பாறை டிசம்பர் 25-ஆம் தேதி சுமார் 20:20 UTC-க்கு நமது கிரகத்தை கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் நெருங்கிய அணுகுமுறை அட்டவணையின்படி, அதே நாளில் 2020 XY எனும் மற்றோரு மிகச் சிறிய உடுக்கோள் பூமியைக் கடக்கிறது.

இந்த ராட்சத சிறுகோள் 144 அடி அகலம் வரை இருக்கக்கூடும், ஆனால் இன்னும் தொலைவில் பூமியிலிருந்து 3.6 மில்லியன் மைல் தூரத்தில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய மற்றும் நெருக்கமாக கடக்கும் Asteroid 501647 (2014 எஸ்டி 224) மணிக்கு 22,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.

நாசா இரு சிறுகோள்களையும் NEOs (பூமிக்கு அருகில் உள்ள பொருள்கள்) என்று பெயரிட்டுள்ளது.