மன்னிச்சிடுங்க அங்கிள்! நீ எங்க இருந்தாலும் வந்துடு! இறந்து போன இம்சை அரசன் புலிகேசி படபிரமுகரின் குரல்! சோகத்துடன் பதிவிட்ட பிரபலம்!

சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த 23 ம் புலிகேசி படத்தை மறக்க முடியுமா என்ன? வடிவேலு நடிப்பில் வந்த இப்படம் அனைவரின் மனதை கவரந்த காமெடி படமாக அமைந்தது.

இப்படம் மட்டுமல்லாது, நாடோடி தென்றல், தாஜ் மஹால், நான் கடவுள் ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிவர் கிருஷ்ண மூர்த்தி. ஆடைவடிவமைப்பாளராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

5 முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் சென்னை மடிப்பாக்கம் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 77 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமாகியுள்ளார்.

இயக்குனர் பாரதி ராஜா, கவிஞர் லீனா மணிமேகலை, இயக்குனர் சுகா என பலரும் சோகத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இதில் கவிஞர் லீனா மணிமேகலை, என்னிடம் மட்டும் ரிசோர்ஸ் இருந்திருந்தால் உங்களை எப்படியாவது புளியமரத்தின் கதை படத்தை எடுக்க வைத்திருப்பேன். மன்னித்து விடுங்கள் அங்கிள்! மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

நான் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையைத் திரைப்படமாக்கும் போது நீ எங்க இருந்தாலும் வந்துடு லீனா என கூறிய அந்த இயக்குனர் இப்போது இல்லை என கூறியுள்ளார்.

அதே போல இயக்குனர் சுகா கலைஞர்…

இவ்வளவு மரியாதையால்லாம் என்னை யார்கிட்டையும் அறிமுகப்படுத்தாதீங்க.. சார், நான் உங்க ஃபிரண்டுனு சொல்லுங்க, அது போதும் என என கூறி நடந்த நிகழ்வை பதிவிட்டுள்ளார்.