தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜெகமே தந்திரம் படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. இப்படத்தில் வந்த புஜ்ஜி பாடல் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகிவிட்டது.
அதே வேளையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் தலைப்பிற்கு ஏற்கனவே பழம் பெரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை வைத்துள்ளது. படத்தயாரிப்பாளர் இந்த கோரிக்கையை ஏற்பாரா என பொறுத்திருந்த பார்ப்போம்.