நடிகை சமந்தா தற்போது தென்னிந்திய அளவில் மிக பெரிய நடிகையாக விளங்குபவர், இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக கடந்த வருடமே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து நடிகை சமந்தா வெளியேறியதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அப்படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரமே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் நடிகை சமந்தா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எதுவும் உண்மையான தகவலாக இல்லாமலும் இருக்கலாம், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.







