சூர்யாவுடன் நடிக்க முதலில் பயந்தேன்’ – உண்மையை போட்டுடைத்த நடிகை அபர்ணா

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

இப்படம் பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி அதிகளவிலான பார்வையாளர்களை பெற்று வருகிறது. மேலும் இந்த பார்வையாளர்களின் கணக்கை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகி விட்டது சூரரை போற்று.

மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை அபர்ணா பாலமுரளி, பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார், அதில் சூர்யா சாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்ததும் நான் ஆகாயத்தில் பறந்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சூர்யா சார் சீனியர் நடிகர் அவர் என்னோடு நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம்.

என்னுடைய பெயர் கூட வெளியே தெரியாது. முதலில் அவருடன் நடிக்க வேண்டும் என்றதும் நான் பயந்தேன் பிறகு பயிற்சியில் தான் இருவரும் கதையை சேர்ந்து ஒன்றாக படித்தோம். எனக்கு மிகவும் உறுதுணையாக ஒத்துழைப்பாக இருந்தார் என கூறியுள்ளார்.