காதல் குறித்த கேள்விக்கு பளிச் என்று பதிலளித்த தல அஜித்!!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் தல அஜித்திடம் அப்போது எடுக்கப்பட்ட பழைய பேட்டியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவரிடம் காதல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், காதலும் நட்பும் ஒன்று தான் என்ற பதிலை அளித்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள பதில்களை எந்த வீடியோவில் காணலாம்.