சீரியல், சினிமா நடிகை வாணி போஜனுக்குக்கு ஜோடிக்கு தளபதி படத்தின் முக்கிய நபர்!

நடிகை வாணி போஜனுக்கு சீரியல், சினிமா வட்டாரத்திலும் உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தெய்வமகள் சீரியலில் குடும்ப பொறுப்புள்ள மருமகளாகவும், நல்ல மனைவியாகவும் சத்யா கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன் பின் அவர் கடந்த 2019 ல் ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய் சேதுபதி, அசோக் செல்வன் நடித்திருந்த இப்படம் ஹிட்டானது.

இதனையடுத்து அவருக்கு லாக் அப் உள்ளிட்ட பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துள்ளன. பின் நடிகர் அதர்வா, விக்ரம் பிரபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோருடன் படங்களில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சச்சின் பட இயக்குனரான ஜான் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

ஜான் மறைந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.