அவுஸ்திரேலியாவில்… 90-களில் ஜெர்ஸியை அணிந்து விளையாட போகும் இந்திய அணி!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி 90-களில் அணிந்திருத ஜெர்ஸியை அணிந்து விளையாட இருப்பதாகவும், அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு பறந்துள்ளனர். அங்கு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று தொடர்களில் விளையாடவுள்ளனர்.

இதற்காக அவுஸ்திரேலியாவில் இறங்கிய இந்திய அணி, அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி தன்னுடைய வழக்கமான நீலநிற ஜெர்ஸியை அணியாமல், 90-களில் இந்திய அணி என்ன ஜெர்ஸி அணிந்து விளையாடியதோ அதே போன்ற ஜெர்ஸியுடன் களமிறங்கவுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிசிசிஐ நிர்வாகம், எம்பிஎல் நிறுவனத்துடன் 20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் வடிவமைத்துள்ள ஆடை, கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முதலில் வண்ண ஆடையை அணிந்த டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நீல நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் இந்திய அணி, இந்த முறை கருநீல நிறத்தில் தோள் பட்டையில் சில வண்ணக் கோடுகளுடன் ஆடை வடிமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அவுஸ்திரேலியா அணியும், உள்நாட்டு பூர்வகுடிமக்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஆடை அணிந்து விளையாடுகின்றனர்.

வழக்கமாக ஒருநாள் தொடருக்கு மஞ்சள் ஆடையும், டி20 தொடருக்குக் கரும்பச்சை ஆடையும் ஆஸ்திரேலிய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.

ஆனால், இந்த முறை உள்நாட்டு மக்களால், உள்நாட்டு மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல வண்ணங்களில் அவுஸ்திரேலியா அணிக்கு ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.