தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தமன்னா. இதுமட்டுமின்றி பாலிவுட் படங்களில் நடித்து அங்கேயும் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
தமிழில் கல்லூரி எனும் எதார்த்தமான படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் விஷாலின் ஆக்ஷன். மேலும் தற்போது தட் இஸ் மகாலட்சுமி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியது, அதில் பார்க்க மிகவும் உடல் எடையை கூட்டி கொஞ்சம் குண்டாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.