அனுஷ்காவின் படத்தை வாங்கிய முக்கிய டிவி சானல் நிறுவனம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனுஷ்கா குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடித்து வந்தாலும் நல்ல கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் அவர் காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்து வெளியான நிசப்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இது அவரின் படங்களில் சிறந்த படமாகவும் அமைந்தது.

இதில் முக்கிய வேடத்தில் மாதவனும் நடித்திருந்தார். தெலுங்கிலும் இப்படம் வெளியானது.

தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை Zee Telugu சானல் வாங்கியுள்ளதாம்.

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் இப்படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.