விஜய் சேதுபதி நடிக்கும் கொரோனா குமார் படத்தின் செம மாஸ் அப்டேட்..!

கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்பது மிகவும் உண்மை.

இதன்பின் மீண்டும் கோகுல் இயக்கத்தில் ஜூங்கா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

சமிபத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளிவந்திருந்தது.

இப்படத்தின் இயக்குனர் கோகுல் தற்போது அப்படத்திற்கு ” கொரோனா குமார் ” என தலைப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் முழு ஸ்ரிப்ட்டிற்கு பூஜை போட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.