வேற லெவல் சாதனை! மாஸ் காட்டிய சூர்யா!

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. ஆயுத பூஜை ஸ்பெஷலாக இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சுதா கே பிரசாத் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியா அபர்ணா நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றுவிட்டன.

இந்நிலையில் அடுத்த் பாடலாக ஆகாசம் பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. இப்பாடல் 1.2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.