கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாத காலமாக பாதிக்கப்பட்டடிருந்த சினிமா படப்பிடிப்புகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மெல்ல மெல்ல பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஆங்கங்கே நடைபெற்று வருகிறது.
சினிமாவில் சில ஹீரோக்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். அவ்வகையில் தெலுங்கு சினிமா ஹீரோவான பிரபாஸ்க்கு மற்ற மொழி சினிமா ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ராதே ஷ்யாம். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்தில் இந்த போஸ்டர் 15 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 24 மணி நேரத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்ஸ் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
All the very best Radha, knowing your vision , I am sure #RadheShyam will be epitome of love stories
https://t.co/VVUBZUp1VW
— hanu raghavapudi (@hanurpudi) October 24, 2020