கன்னட நடிகையாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி, போதை பொருள் விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டு காவல் துறையினரின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் சஞ்சனா வீட்டில் சொத்து ஆவணங்களை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர் வைத்திருந்த கார் சஞ்சனாவின் வருமானத்தில் வாங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை செய்கையில், அவர் தனது நண்பரான டாக்டர் ஆசிஸ் என்பவர் வாங்கி கொடுத்ததாக கூறி உள்ளார் எனவும், மருத்துவராக இருந்து வரும் ஆஸிஸுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
வீட்டில் அடிக்கடி மது விருந்தை ஏற்படுத்திய நிலையில், சஞ்சனா கல்ராணியின் குடும்பத்தினருக்கும் ஆசிஷிற்கும் இடையே நல்ல அறிமுகம் இருந்துள்ளது. இதனையடுத்து இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், சில நாட்களில் வீடு மற்றும் காரினை சஞ்சனாவின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
மேலும், மதுபானம் அருந்தும் போது அதிகளவில் மது அருந்திவிட்டு போதையில் அக்கம்பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், போதைப்பொருள் உபயோகம் செய்தும் சண்டை நடந்துள்ளது. காவல்துறையினர் விசாரணைக்கு வருவதை முன்னதாக அறிந்த சஞ்சனா, அக்கம்பக்கத்தினரிடம் தன்னை பற்றி காவல்துறையினர் ஏதும் கேட்டால், சிறிய பிரச்சனையெல்லாம் கூறிவிடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.
சஞ்சனாவின் அலைபேசி மற்றும் மடிக்கணினிகள் இருந்த போட்டோக்கள், வீடியோக்களை அழித்த நிலையில், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகள் சென்று வந்த அனைத்து ஆவணங்களையும் கிழித்து போட்டுள்ளார். மது அருந்தினால் ரத்த பரிசோதனையில் தெரிந்து விடும் என்பதை அறிந்து, கைதாவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே மதுபானத்தையும் அருந்தாமல் இருந்து வந்துள்ளார்.