கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் போதைப்பொருள் மற்றும் கடத்தல் அதன் பயன்பாடு அதிகரித்து வந்ததால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கன்னடத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், நடிகை ராகினி திவேதியின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கடந்த 4ம் தேதி அதிரடியாக சோதனை செய்தனர். இதில் அவரை கைதும் செய்தனர். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் பயன்பாடு தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணியையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடிகைகள் ராகினி, சஞ்சனா-விடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோரின் குடும்பத்தினர், அவர்களுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரு நடிகைகள் நடிகைகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெங்களூர் புறநகரில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விருந்து நிகழ்ச்சிகளில் கன்னடத்தை சேர்ந்த முக்கிய திரைபிரபலன்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் மகன்கள், முக்கியத் தொழிலதிபர்களின் மகன்கள் என 24 பேரின் பெயர்களை இந்த நடிகைகள் வாக்குமூலமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பெங்களூர் தலைநகரில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகனும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பற்றி இரண்டு நடிகைகளும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.