அன்னாசி பழத்தின் நன்மைகள், பக்க விளைவுகளும்!

அன்னாசி பழம் பார்க்க கரடு முரடாக இருக்கும். ஆனால் தோல் சீவி இதனை நறுக்குவதும் கொஞ்ச கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன் பின் கிடைக்கும் பழம் சுவை அனைவரையும் சாப்பிட தூண்டும்.

இது மட்டுமல்ல, அன்னாசி பழத்தில் பல்வேறு ஊட்டசத்துக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. அன்னாசி பழத்தை தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் ‘ப்ரோமிலைன்’ இருக்கிறது.

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்கு பலவித உடல்நல குறைவுகளைச் சரி செய்யும் தன்மை கொண்டுள்ளது.

அன்னாசி பழம் பயிரிடும் முறை

  • நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது அன்னாசி பழம். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டியது அவசியம்.
  • சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன் படுத்திக்கொண்டு, நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்து ஏற்றவாறு பார்களை அமைக்கணும்.
  • கொண்டைகள், மேல் கன்றுகள், பக்க கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 3௦௦ முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகள் தேர்வு செய்து நடவணும்.
  • நடவு செய்வதற்கு முன்பு கன்றுகளை மேன்கோசெப் 3 சதம் அல்லது கார்பன்டாசியம் ஒரு சத கலவையில் 5 நிமிடங்கள் நனைத்து நடவு செய்வது முக்கியம்.
  • கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ.மீ ஆகவும், வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி 60 செ.மீ ஆகவும் இருக்குமாறு விதை நேர்த்தி செய்த கன்றுகளை நடவு செய்யணும்.
  • மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சி, நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
  • ஒரு எக்டருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இட வேண்டும். பின்பு செடி ஒன்றுக்கு 16 கிராம், சூப்பர் பாஸ்பேட் 4 கிராம் கலந்து கன்று நட்ட ஆறாவது மாதமும் பின்பு பன்னிரெண்டாவது மாதமும் இட வேண்டும்.

அன்னாசி பழத்தின் நன்மைகள்

  • அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறையும்.
  • உடலில் ஏதேனும் ரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை அன்னாசி பழம் குணமாக்கும்.
  • நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் தன்மை கொண்டது.
  • வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணமாகும்.
  • பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  • ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பை பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
  • அன்னாசி பழத்தை சாப்பிட்டால் பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்கு தேவையான உப்பு கிடைக்கும்.

அன்னாசி பழத்தின் பக்க விளைவுகள்

  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அன்னாசி பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
  • நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள கூடாது.
  • பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடிக்கவோ கூடாது. இதில் நச்சுத்தன்மை கடுமையான வாந்தியை ஏற்படுத்திவிடும்.
  • அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை உண்டாகும்.
  • அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படும்.
  • முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட கூடாது. அன்னாசி பழம இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடும்.
  • அன்னாசி பழத்தை அதிகளவில் உட்கொள்ள கூடாது. சாப்பிட்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படுத்தி விடும்.